பாலிவுட்டில் பிஸியாக நடித்துவந்த நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். முதலில் அவர் அறிமுகமான தேவரா திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது.
இப்போது ராம்சரணுக்கு ஜோடியாக பெட்டி படத்தில் நடித்திருக்கிறார். அடுத்த மாதம் படமானது ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் மேடையில் வைத்து ஜான்வியை ராம்சரண் புகழ்ந்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் லேடி சூப்பர் ஸ்டாராக மின்னியவர் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவர் முதலில் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா உள்ளிட்டவைகளை ரூல் செய்து பிறகு ஹிந்தி சினிமாவுக்கு சென்றார்.
அடுத்தடுத்த வாய்ப்புகள்: அந்தப் படத்துக்கு பிறகு ஜான்வியின் நடிப்பில் ஒரு வருடம் படம் வெளியாகவில்லை. பிறகு 2020ஆம் ஆண்டு கோஸ்ட் ஸ்டோரிஸ், கஞ்சன் சக்சேனா கார்கில் கேர்ள் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
அந்தப் படங்களுக்கு பிறகு தொடர்ந்து ஜான்விக்கு வாய்ப்புகள் கிடைக்க; கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் வளர ஆரம்பித்தார். இப்போது அவர் பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க ஹீரோயின்களில் ஒருவராக வலம்வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.










