Tuesday, August 18, 2026
-- Advertisement--

சின்ன வயசிலேயே சூப்பர் ஸ்டாரின் பாராட்டு… ‘சாரா’ குறித்து ரஜினி சொன்ன வார்த்தைகள் வைரல்!

கட்டா குஸ்தி 2′ படத்தை பார்த்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய ஒரு கருத்தை நடிகர் விஷ்ணு விஷால் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார்.

படத்தின் வெற்றி சந்திப்பில் பேசிய விஷ்ணு விஷால், ரஜினிகாந்த் படத்தை பார்த்து தன்னை நேரடியாக பாராட்டியதாக கூறினார். அதில் குறிப்பாக, படத்தில் நடித்திருந்த சிறுமி சாரா குறித்து ரஜினிகாந்த் தனியாக விசாரித்ததாக அவர் தெரிவித்தார்.

விஷ்ணு விஷால் கூறுகையில், படத்தில்சாராஎன்ற ஒரு பாப்பா இருக்கிறாளேஅவளை வைத்து தனியாக ஒரு படம் பண்ணலாம். அவளுடைய நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது என்று ரஜினிகாந்த் பாராட்டியதாக தெரிவித்தார். அந்த வார்த்தைகள் படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் பங்களிப்பையும் ரஜினிகாந்த் பாராட்டியதாகவும், குறிப்பாக குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பு ரசிகர்களின் மனதில் நீண்ட நாள் நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ரஜினிகாந்தின் இந்த பாராட்டு தற்போது சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles