Sunday, September 6, 2026
-- Advertisement--

‘எது பேசினாலும் பிரச்னை ஆகுது’.. ரசிகர்களை சிரிக்க வைத்த ரஜினி பேச்சு!

ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் `தர்மன்’ பட அறிமுக விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “பேச அழைக்கிறேன் எனச் சொன்னாலே பயமாக இருக்கிறது. நான் ஏதாவது பேசினாலே, எனக்கோ.. பிறருக்கோ பிரச்னை ஆகிறது. பேசாமல் அமைதியாக இருந்தால், ’வாயில் கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா’ என்கிறார்கள். பேசினால், `இப்போ பேசு’ என்கிறார்கள். நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. பிடித்தவர்களுக்கு என்ன செய்தாலும் பிடிக்கும்.

இதற்கு முன் இந்தப் படத்தை செய்ய பலரிடம் பேசினோம். முதலில் இந்தப் படத்தை இயக்க ரவிக்குமாரை தேர்வு செய்தோம். பின்னர் சுந்தர் சி வந்தார், ஆனால் அவருடைய மற்ற படங்களின் ஒப்பந்தத்தால் அவர் விலகிவிட்டார். பின்னர் சிபி சக்கரவர்த்தி வந்தார். அவர் சொன்ன கதை பிடித்திருந்தாலும், அது மிகவும் சென்சிட்டிவான கதை. நியூக்ளியர் சைன்டிஸ்ட் கதை, பல்வேறு இடங்களுக்குச் சென்று படமாக்க வேண்டும். நிறைய காலம் தேவைப்படும் என்பதால் பின்னர் செய்யலாம் என நினைத்தோம். பின்பதான் அஷ்வத் இந்தப் படத்துக்கு வந்தார்.

கமல் சொன்னதுபோல எனக்கு ஏன் டென்ஷன் இருந்தது என்றால், ’நான் கதை கேட்க மாட்டேன், முழுப் பொறுப்பும் உங்களிடம் கொடுக்கிறேன்’ எனச் சொல்லிவிட்டார். அதனாலதான் டென்ஷன். ஆனால், நான் அவரை வற்புறுத்தி கதை கேட்க வைத்துவிட்டேன். என்ன சொன்னாலும் இது பெரிய பொறுப்பதான். அதற்காக மொத்த பாரத்தையும் உங்கள் மேல் வைக்கமாட்டோம். இது ஒரு குழு உழைப்பு.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles