சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்பேர்ப்பட்ட நடிகர் என்பது உலகத்துக்கே தெரியும் தமிழ் சினிமாவில் முன்னேற்றத்திற்கு இவருக்கும் பெரிய பங்கு உண்டு இவருடைய படங்கள் வெளியானால் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து ரசித்து பார்த்துச் செல்வார்கள் ரசிகர்கள்.
71 வயதாகும் ஒரு மனிதனுக்கு சிறு பிள்ளைகள் இருந்து முதியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

ரஜினி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மீண்டு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அனைவரும் கோயில்களில் யாகம் நடத்தி மண்சோறு சாப்பிட்டார்கள் அந்த அளவிற்கு மக்கள் தீராத அன்பை ரஜினி அவர்கள் மீது வைத்துள்ளார்கள்.
குறிப்பாக ரஜினி அவர்கள் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியவுடன் அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடே சந்தோசத்தில் இருந்தது. மருத்துவ ஆலோசனை பெற்ற ரஜினி அவர்கள் தற்பொழுது அரசியலில் ரஜினி அவர்கள் இறங்கினால் அவருடைய உடல்நலம் பெரிதாக பாதிக்கப்படும் என்று மருத்துவர் எச்சரிப்புக்கு பின் நான் அரசியலுக்கு வரவில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவரை சரியாக புரிந்து கொண்ட ரசிகர்கள் தலைவா நீங்கள் அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை நீங்கள் உங்கள் உடல் நலனை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள் அதுவே எங்களுக்குப் போதும் என்று ரஜினியின் அறிவிப்புக்கு ஒத்துழைத்தனர்.

தற்பொழுது ரஜினி மற்றும் அவரது ரசிகர்கள் தன்னால் முடிந்த உதவியை ரஜினிகாந்த் பவுண்டேசன் மூலமாக செய்து வருகிறார்கள் தற்பொழுது டிஎன்பிஎஸ்சி நுழைவு தேர்வு எழுத விரும்புபவர்களின் கஷ்டப்படும் 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து எந்த ஒரு கட்டணமும் இன்றி அவர்களுக்கு முறையான பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி கொடுக்க உள்ளார்கள்.
அதற்கான விண்ணப்பத்தை தற்பொழுது இணையத்தில் வெளியிட்டுள்ளனர் விருப்பப்பட்டவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய விரும்புபவர்கள் இந்த இணையதளத்தில் ஜனவரி 10 -01 – 2022 ஆம் தேதிக்குள் பதிவிட வேண்டும்.
ரஜினி ரசிகர்களின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பினரும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பதிவு செய்ய வேண்டிய இணையத்தளம் இதோ:
https://rajinikanthfoundation.org/tnpsc.html#










