சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு தமிழ் கடவுளான முருகன் பாடல் கந்த சஷ்டி கவசம் குறித்து யூடியூப் சேனல் ஒன்று மிக கேவலமான வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதைப் பார்க்கவே சிலர் அருவருக்கத்தக்க வகையில் அந்த வீடியோ உள்ளதாக கூறினர். இந்த வீடியோ மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவுக்கு எதிர்த்து பல முக்கிய தலைவர்களும் பிரபலங்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர் .
இதனை தொடர்ந்து அந்த கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த சேனலில் உள்ள 500 வீடியோக்கள் நீக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அண்ணன் ரஜினிகாந்த் பெரிய ஆன்மீக வாதி, அவர் கந்தசஷ்டி விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் கந்த சஷ்டி கவசத்திற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து ஒரு ட்விட் செய்துள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாத படி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு இதற்காக தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.. இனிமேலாவது மதத்துவவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும் எல்லா மதமும் சம்மதமே.. கந்தனுக்கு அரோகரா..