நகைச்சுவை நடிகரான வடிவேலுவும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் இணைந்து பல படங்களில் நடித்து உள்ளனர். இவர்கள் காம்பினேஷனில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றால் சந்திரமுகி தான்.
‘ தம்பி கோபாலு “என்று அந்த படத்தில் வடிவேலு செய்யும் காமெடி அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். இந் நிலையில் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று தமிழகமே காத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ரஜினியை அளித்த பேட்டியில் நான் முதலமைச்சராக அமர மாட்டேன்.
முதலமைச்சர் பொறுப்பிற்கு வேறு ஒருவரை தான் நியமிப்பேன், தலைமை என்னுடையதாக இருக்காது என்று கூறினார். அப்போது வடிவேலு பொது இடத்திற்கு வந்தபோது அவரிடம் ரஜினி அரசியல் பேட்டி குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள், அதற்கு வடிவேலு நான்தான் அடுத்த முதலமைச்சர் என்பது போல ஒரு கருத்தை பதிவிட்டார்.
இதற்கு சமீபத்தில் ரஜினி வடிவேலு க்கு போன் செய்து என்ன வடிவேலு எப்படி இருக்கீங்க? என்று கூறி சில மணிநேரம் பேசியுள்ளார் இதுகுறித்து வடிவேலு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பேட்டியின் போது ரொம்ப நல்லா பேசுறீங்க? அப்படின்னு சொல்லி ரெண்டு பேரும்கொஞ்ச நேரம் மனம் விட்டு பேசி இருந்ததாக வடிவேலு கூறியிருக்கிறார்.