நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் இணைந்து நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு ‘ஜெயிலர் 2’ படம் வெளியானவுடன் தொடங்கவுள்ளது படக்குழு. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ரஜினி மற்றும் கமல் ஆகியோருடன் தனித்தனியாக நாயகியாக நடித்துள்ளார் த்ரிஷா.










