இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்து அதன் பிறகு இயக்குனர் பாலச்சந்திரன் படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார். இவர் நடித்த முதல் படத்தில் இருந்து தற்போது வரை இவருக்கு என்று ஒரு தனி ஸ்டைல் இவர் படத்தில் இருக்கும்.
சூப்பர் ஸ்டார் என்பது இவருக்கு மக்கள் வைத்த பட்டம். சூப்பர் ஸ்டார் படம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். தலைவர் என்று மக்கள் ரஜினியை அழைத்து வருகின்றனர். சினிமா ஆரம்பித்த காலத்தில் ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து சில படங்களில் நடித்தனர்.
அதன் பிறகு இரண்டு பேரும் சினிமா உச்சத்தில் இருக்கும் போதே பல அரசியல் கட்சித் தலைவர்கள் இவர்கள் இரண்டு பேரையும் கட்சிக்கு அழைத்தனர். ஆனால் அப்போதிருந்த சூழ்நிலையில் இரண்டு பேருமே அதனை மறுத்தனர்.
தற்பொழுது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் தனித்தனியாக அரசியல் கட்சியைத் தொடங்கினர். கமலஹாசன் தற்போது மக்கள் நீதி மய்ய கட்சி ஒன்றை தொடங்கி தேர்தலில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்தும் வர உள்ள தேர்தலில் போட்டியிடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அவர் நிர்வாகிகளிடம் நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் கலந்து ஆலோசித்தார். இன்று இந்த பேச்சுவார்த்தை முடிவுற்றது. இதுகுறித்து ரஜினி என்ன முடிவு செய்யப் போகிறார் என்று தமிழகமே காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது மண்டபத்திற்கு எதிரே காவி நிற வேட்டி அணிந்த சாமியார் ஒருவர் நடுரோட்டில் ரஜினிகாந்த் அ அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம், ஆண்டவன் இவரை இயக்குகிறார் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றது. பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று அவர் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.