Wednesday, August 19, 2026
-- Advertisement--

அதிரடி இன்னிங்ஸின் ரகசியம் என்ன? ரஜத் பட்டிதார் ஓபன் டாக்!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் தரம்​சாலா​வில் நடை​பெற்ற தகுதி சுற்று 1 ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்சிபி அணி 92 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் முன்​னாள் சாம்பியனான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது.

முதலில் பேட் செய்த ஆர்சிபி 5 விக்கெட்​கள் இழப்​புக்கு 254 ரன்​கள் குவித்து மிரட்​டியது. கேப்​டன் ரஜத் பட்டிதார் 33 பந்​துகளில், 9 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 93 ரன்​கள் விளாசி​னார். 255 ரன்​கள் இலக்கை துரத்​திய குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 19.3 ஓவர்​களில் 162 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

குஜ​ராத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஆர்​சிபி அணி​யின் கேப்​டன் ரஜத் பட்​டி​தார் கூறிய​தாவது: தகுதி சுற்று ஆட்​டம் எங்​களுக்கு அற்​புத​மான ஆட்​ட​மாக அமைந்தது. பேட்​டர்​கள் ஆதிக்​கம் செலுத்​திய விதம், ரன் குவிக்க வேண்​டும் என்ற உறு​தி​யோடு விளை​யாடியது எங்​களுக்கு சாதகமாக அமைந்​தது.

இது ஒரு தெளி​வான திட்​ட​மிடலாக இல்​லா விட்​டாலும், நாங்​கள் அதற்கு தயா​ராகவே இருந்​தோம். குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி இந்த தொடரில் விளை​யாடிய விதத்தை வைத்​து, பவர்​பிளே​யிலேயே அவர்​களு​டைய முக்கியமான மூன்று பேட்​டர்​களை ஆட்​ட​மிழக்​கச் செய்ய வேண்டும் என்​ப​தில் நாங்​கள் தெளி​வாக இருந்​தோம், அது நல்ல பலனைத் தந்​தது. இவ்​வாறு ரஜத்​ பட்​டி​தார்​ கூறி​னார்​.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles