Tuesday, February 11, 2025
-- Advertisement--

குக் வித் கோமாளி பாலாவிற்கு 10 லட்சம் CHEQUE கொடுத்து உதவிய லாரன்ஸ் எதுக்கு தெரியுமா..? இசை வெளியிட்டு விழாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

நடிகர் லாரன்ஸ் நடன இயக்குனராக மக்களை கவர்ந்த இவர் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிகராகவும் வெற்றி பெற்றவர் குறிப்பாக லாரன்ஸ் காஞ்சனா என்ற பேய் படத்தை தானே நடித்து இயக்கியிருந்தார். அந்தப் படம் கொடுத்த மாபெரும் வரவேற்பால் அதனைத் தொடர்ந்து 2 பாகங்கள் எடுத்தார்.

லாரன்ஸ் எடுத்த காஞ்சனா படம் வசூல் ரீதியாக 100 கோடியை கடந்து சென்றதால் அதனை தொடர்ந்து பேய் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார் லாரன்ஸ். சிவலிங்கா என்ற படத்தில் நடித்த லாரன்ஸிற்கு அந்தப் படமும் ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்ததால் பி வாசு இயக்கத்தில் தற்பொழுது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி முதல் பாகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி 2க்கு முன் தற்போது ருத்ரன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் லாரன்ஸ். ருத்ரன் படத்தில் லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ருத்ரன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் லாரன்ஸ் செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக எந்த ஒரு படத்தின் ஆடியோ லான்ச் என்றால் அந்தப் படத்தின் பாடல்களை பிரபலப்படுத்தும் விதமாக நடனம் ஆடுவதும் மற்றும் கூடியிருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்த பன்ச் வசனங்கள் பேசுவதும் தான் வழக்கமாக ஹீரோக்கள் செய்து வருகிறார்கள் ஆனால் லாரன்ஸ் அவர்கள் தன்னுடைய படத்தின் ஆடியோ லாஞ்சில் 10 லட்ச ரூபாய் காசோலையை குக் வித் கோமாளி பாலாவிற்கு வழங்கி 25 பிள்ளைகளின் படிப்பிற்கு உதவியுள்ளார்.

இந்த செயல் பலருக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும் மற்ற ஹீரோக்களும் இதுபோல உதவ முன் வரட்டும் என்று கூறி வருகிறார்கள் இணையவாசிகள். லாரன்ஸ் செய்த இந்த செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles