பிரதாப் போத்தன் கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.இவரின் நடிப்பில் வெளியான வறுமையின் நிறம் சிறப்பு, புதுமைப்பெண், ஜல்லிக்கட்டு, படிக்காதவன் போன்ற படங்கள் மாபெரும் ஹிட் படங்களாக அமைந்தது.

மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்த இவருக்கு நடிகை ராதிகாவுடன் காதல் மலர்ந்தது நண்பர்கள் திருமணமும் செய்து கொண்டார்கள் ஆனால் சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள்.

தற்பொழுது நடிகர் மற்றும் இயக்குனருமான பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். இன்று காலை உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் காலமானார் இவருக்கு வயது 70.