தமிழ் திரையுலகில் ‘சக்சஸ் ஃபார்முலா’ என்று அறியப்பட்ட சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி. சவுத்ரி அவர்களின் மறைவு இந்தியத் திரைத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் அவர் உயிரிழந்த செய்தி கேட்டு, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
“என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. சவுத்ரி தலைசிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர். அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.”.
ஆர்.பி. சவுத்ரி அவர்கள் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி எனப் பல்வேறு மொழிகளில் படங்களைத் தயாரித்தவர்.பல முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படங்களை வழங்கியுள்ளது.
விஜய், சூர்யா போன்ற இன்றைய முன்னணி நட்சத்திரங்களின் ஆரம்பகால வெற்றிப் படங்களுக்கு அடித்தளம் இட்டவர் சவுத்ரி. திரைத்துறையின் “தந்தை” போன்ற ஒரு ஆளுமையை இழந்திருப்பது ஈடு செய்ய முடியாத இழப்பாகவே பார்க்கப்படுகிறது.அவரது ஆத்மா சாந்தியடையட்டும். திரைத்துறை ஒரு மாபெரும் வழிகாட்டியை இழந்து நிற்கிறது.










