Friday, September 11, 2026
-- Advertisement--

புஷ்பா படத்தில் கத்திரிப்போட்ட அல்லுஅர்ஜூன் ரஷ்மிகாவின் அந்த சர்ச்சைக்குரிய காட்சி..!!! தயவு செய்து எல்லைமீறிய காட்சிகள் வேண்டாம் ரசிகர்கள் வேண்டுகோள்.

புஷ்பா அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம். ஒரு தெலுங்கு படத்திற்கு சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்து படக்குழுவினர்கள் ஒன்று சேர்ந்து சென்னை, ஹைதராபாத், மும்பை சென்று தனது படத்தை புரமோஷன் செய்து அதில் பிசினஸை அதிகப்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளனர்.

தமிழ் படங்களை தெலுங்கில் ரிலீஸ் செய்து தெலுங்கு ரசிகர்களை கவருவதும் , தெலுங்கு படங்களை தமிழில் ரிலீஸ் செய்து தமிழ் ரசிகர்களை கவருவதும் ஹீரோ மற்றும் தயாரிப்பாளரின் யுத்தி.

புஷ்பா படத்தை பொறுத்தவரை படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் பெரிய வெற்றியடைந்தது குறிப்பாக சாமி சாமி பாடல் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது அதன்பின் ஓ சொல்றியா மாமா என்ற பாடல் படு ஹிட் பாடலாக ரசிகர்களை கவர்ந்தது.

அல்லு அர்ஜுன் திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி ஆந்திர மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வெளியானது குறிப்பாக தமிழ்நாட்டில் புஷ்பா படம் டப் செய்யப்பட்டு வெளியானது முதல் நாளில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஓரளவுக்கு ஓகே தான் படத்தின் நீளம் தான் ரொம்ப அதிகமாக இருக்கிறது என்று படத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்து வந்தார்கள். படத்தில் ஏகப்பட்ட இடங்களில் கவர்ச்சி காட்சிகள் இருந்தாலும் சமந்தா ஆடிய ஓ சொல்றியா மாமா என்ற பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. அதுபோல ராஷ்மிகா மந்தனாவின் சாமி சாமி பாடலுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

கமர்சியல் படங்களில் கவர்ச்சி காட்சிகள் வைப்பது தான் ஆனால் படத்தில் கவர்ச்சி காட்சிகள் இருந்தாலும் ரொமான்ஸ் காட்சிகளும் உள்ளது குறிப்பாக அல்லு அர்ஜுன் காருக்குள் ராஷ்மிகாவின் மேல் பகுதியில் கை வைப்பது போல எக்குத்தப்பான காட்சி பார்ப்பவர்களை கொஞ்சம் நெளிய வைத்தது.

அல்லு அர்ஜுன் படம் என்றால் தெலுங்கு ஆடியன்ஸ் பொருத்தவரை குடும்பத்தோடு வந்து ரசித்து பார்ப்பார்கள் குழந்தைகளுக்கும் அல்லு அர்ஜுன் அவர்களை மிகவும் பிடிக்கும் இது போன்ற காட்சிகள் அவர் படத்தில் இடம் பெற்றால் எப்படி இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியும் என்று ஒரு சிலர் தங்களது கருத்துக்களை அல்லு அர்ஜுன் காதுக்கு கொண்டு போக தற்போது அந்த காட்சிகளுக்கு கத்திரி போட்டுள்ளது படக்குழுவினர்.

கமர்சியல் படங்களில் கவர்ச்சி வைப்பது வழக்கம் என்றாலும் எல்லை மீறிய கவர்ச்சி காட்சிகள் வைப்பது சிலரை ரசிக்க வைத்தாலும் பலரை முகம் சுளிக்க வைக்கும் என்று ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles