Friday, March 29, 2024
-- Advertisement--

புனித் ராஜ்குமாரின் கடைசி படத்தை வெளியிடும் அவரது மனைவி..!!! இப்படி ஒரு மனிதனை இழந்துவிட்டோம் வருத்தத்தில் ரசிகர்கள்.

புனித் ராஜ்குமார் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் 29 அக்டோபர் 2021 ஆம் ஆண்டு புனித் ராஜ்குமார் அவர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

46 வயதான அவருக்கு எப்படி திடீரென்று ஹார்ட் அட்டாக் வந்தது என்று பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். புனித் ராஜ்குமார் அவர்களின் இழப்பு கன்னட சினிமா மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் திரையுலகினர் அனைவர்க்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

புனித் இறந்த பிறகுதான் அவர் நடிகர் என்பதை தாண்டி எப்பேர்ப்பட்ட மனிதர் என்பது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. தான் நடித்தோம் சம்பாரித்தோம் என்று இல்லாமல் சத்தமில்லாமல் ஏன் அவரது குடும்பத்தினருக்கு தெரியாமல் பல உதவிகளை செய்து வந்துள்ளார்.

குறிப்பாக 1800 குழந்தைகளை படிக்க வைத்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பெற்றோர்களால் கைவிடப்பட்ட முதியவர்களை காப்பதற்காக காப்பகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். பசுக்களைப் பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் கோசாலை நடத்தி வந்துள்ளார். இது போன்ற செய்திகள் அவர் இறப்புக்கு பிறகு வர அவர் மீது பெரிய மரியாதை ரசிகர்களிடம் ஏற்பட்டது.

புனித் இறந்த தினத்தன்று அவரது ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் திரண்டு தூங்காமல் அப்பு அப்பு என்று அழைத்து கதறி அழுத காட்சி இன்றும் மறக்க முடியாத ஒன்றாகும்.

இது ஒருபுறமிருக்க தனது கணவர் புனித் ராஜ்குமார் அவர்கள் கடைசியாக நடித்த படத்தை அவரது மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமார் அவர்கள் தயாரித்திருந்தார். GG என்ற பெயரிடப்பட்ட அந்த படம் வருகின்ற 28 அக்டோபர் 2022ஆம் ஆண்டு திரையிட உள்ளனர்.

இதுகுறித்து புனித் ராஜ்குமார் அவர்களின் மனைவி கூறியது அப்புவின் கடைசி படம் அவர் தனது அபிரிதமான அன்பைப் பொழிந்த நிலத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கர்நாடக காடுகளை அவர் ஆராய்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

கணவரின் கடைசி படத்தை திரைக்கு கொண்டு வந்து அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதில் மும்மரமாக உழைத்து வருகிறார் புனித் அவர்களின் மனைவி.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles