எந்த வேலை என்றாலும் நம் நாட்டில் செய்வதைப்போல் வராது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனாலும் சில வேலைகளை வெளிநாட்டிலிருந்து செய்தால் எனக்கு வரும் என்று சிலர் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதற்கு இசை அமைப்பாளர்களும் விதிவிலக்கல்ல. இங்கிருந்து மியூசிக் போட்டால் நமக்கு வராது என்று நினைத்துக் கொண்டு வெளிநாட்டில் போய் ரூம் எடுத்து தங்கி இசை அமைக்கிறார்கள் .இது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில் அப்படி வெளிநாட்டிற்கு சென்று மியூசிக் போடும் ஒரு இசையமைப்பாளரை பிரபல தயாரிப்பாளர் தன் வார்த்தைகளால் தாக்கியுள்ளார். மின்னலே, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர்.
ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது படவாய்ப்புகள் சரியாக அமையவில்லை இவர் ஒரு படத்துக்கு மியூஸிக் போட்ட அந்த பாடல் அனைத்தும் ஹிட்டாகும் என்பது போல பாடல்கள் மனதை கவரும் வண்ணம் இருக்கும்.
இவர் பொதுவாக வெளிநாட்டில் சென்று தான் தன் படங்களுக்கு இசை அமைக்கிறார். அதற்கு பிரபல தயாரிப்பாளரான ராஜன் ஏன் உள்நாட்டில் இருந்து செய்தால் அந்த இசைவராதா ? லண்டன் போய் செய்தால்தான் அந்த இசை வருமா? என்று கோபமாக பேசி உள்ளார்.