தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா மோகன். நடிகை பிரியங்கா மோகன் கன்னட சினிமாவில் Ondh Kathe Hella என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக ‘கேங் லீடர்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘கேங் லீடர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரியங்கா மோகன். அவருக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது. இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான சைமா விருதையும் பெற்றார்.

அதைத்தொடர்ந்து பிரியங்காவிற்கு கோலிவுட் பட வாய்ப்புகள் குவிந்தன. அதோடு சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மேலும் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து ‘டான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் மாபெரும் ஹீட் அடித்தது. கிட்டத்தட்ட நூறு கோடி வசூலை அள்ளியது இதை தொடர்ந்து தற்போது தனுசுக்கு ஜோடியாக ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் எம். ராஜேஷ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அதோடு பட வாய்ப்புகளை கைப்பற்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு கூலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.











