நடிகை பிரியா ஆனந்த் வாமனன் என்ற படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தார். இவருக்கு இந்தியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரியா ஹிந்தி சினிமாவிலும் நடித்து வந்தார். பிரியா நடித்த ஒரு சில படங்கள் பெரிய வெற்றி பெற்றதால் அவருடைய கால்ஷீட்டை நாடினார்கள் சிறு பட்ஜெட் படத்தின் இயக்குனர்கள்.
தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த எதிர்நீச்சல் என்ற படத்தில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியா. அந்தப் படத்தின் ஷூட்டிங் நேரங்களில் குறிப்பாக இரவு நேரத்தில் ஆட்டோவில் பிரியா தனுஷ் மற்றும் அனிருத் சுற்றி வந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்தது.
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வதிலும் சரி, ஹீரோக்களுடன் பழகுவதிலும் சரி சகஜமாக பழகுவார் பிரியா. பிரியா ஆனந்தை நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் காதலித்து வருகிறார் இன்று ஒரு செய்தி வலம் வந்தது ஆனால் ப்ரியா அதனைப் பற்றி கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கௌதம் கார்த்திக் ப்ரியா செய்த சேட்டை வீடியோக்கள் எல்லாம் வெளியானது.
சமீபத்தில் ஆதித்ய வர்மா என்ற படத்தில் நடித்திருந்த பிரியா தற்பொழுது ஒரு ஹிந்தி வெப்சீரிஸ் தொடரில் நடித்திருக்கிறார். அந்த வெப்சீரிஸ் இன்று வெளியாகி உள்ளது. அந்த தொடரில் தனது உடையை சுற்றி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்டு கூலாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.