இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குடும்ப நலன் சார்ந்த தற்போதைய நிலவரங்களைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்காக மத்திய அரசால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய ஆறாவது சுற்று டிஜிட்டல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ், மும்பையிலுள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (IIPS) இந்த மெகா ஆய்வை ஒருங்கிணைத்துள்ளது நேற்று தேசிய குடும்ப நல ஆய்வு 6 (NFHS-6) அறிக்கையை வெளியிட்டது. இதில் பல அதிர்ச்சி அளிக்கும் விஷயம் இருந்தாலும், சில மிகழ்ச்சி அடையும் விஷயங்களும் உள்ளது.
கடந்த 2023-2024 காலகட்டத்தில், இந்தியாவின் 715 மாவட்டங்களில் உள்ள சுமார் 6.79 லட்சம் குடும்பங்களிடம் நேரடியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், இந்தியர்களின் வாழ்க்கை முறையிலும் ஆரோக்கியத்திலும் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. இதற்கு முன்பு மத்திய அரசு 2019-21 காலக்கட்டத்தில் இத்தகைய ஆய்வை நடத்தியது.
மத்திய அரசு இந்த தேசிய குடும்ப நல ஆய்வு 6 (NFHS-6) தரவுகளை வெளியிடுவது மூலம் இந்தியப் பொருளாதாரத்திலும், கொள்கை உருவாக்கத்திலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசாங்கம் புதிய சுகாதாரத் திட்டங்களைத் தீட்டுவதற்கும், தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஆயுஷ்மான் பாரத், போஷன் அபியான் போன்ற மெகா மக்கள் நலத்திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கும் இந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே முதன்மை அடிப்படையாக அமைகின்றன.
சொந்தமாக வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களின் எண்ணிக்கை 89 சதவீதமாகவும், தனிப்பட்ட முறையில் மொபைல் போன் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 63.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. மிக முக்கியமாக, பெண்களின் இணையப் பயன்பாடு (Internet usage) 33.3 சதவீதத்திலிருந்து 64.3 சதவீதமாக, அதாவது இரண்டு மடங்குக்கும் மேலாக எகிறி டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், ஆயுஷ்மான் பாரத் போன்ற மத்திய அரசின் திட்டங்களால், குடும்ப அளவில் மருத்துவக் காப்பீடு பெற்றவர்களின் விகிதம் 41 சதவீதத்திலிருந்து 60.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இது 54.1 சதவீதம் என்ற திகைப்பூட்டும் மற்றும் அபாயகரமான அளவில் கார்ப்பரேட் மயமாக மாறியுள்ளது இந்த ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
அரசு வழங்கும் இலவச தடுப்பூசிகள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளைச் சாமானிய மக்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வதோடு, உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்ற தொற்றா நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முறையான உடற்பயிற்சி மற்றும் பாரம்பரிய ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிப்பதே மக்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கிய பாடமாகும்.










