நடிகர் டெல்லி கணேஷ் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனது சிறப்பான நடிப்பால் பலரையும் வியக்க வைத்த மனிதர். வயது மூப்பின் காரணமாக ஒரு சில உடல் நலப் பிரச்சினைகளை சந்தித்து அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார். தூக்கத்திலே இன்று அவர் உயிர் பிரிந்தது.
டெல்லி கணேஷ் அவர்களின் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் விஜய் ரஜினி என்று பிரபலங்கள் இரங்கல் பதிவினை வெளியிட்டு இருந்தனர் இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்பொழுது டெல்லி கணேஷ் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பது புகழ்பெற்ற திரையுலக ஆளுமை திரு டெல்லி கணேஷ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருந்துகிறேன். நடிப்பில் அவர் அபாரமான திறமை கொண்டவர். ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களை ஆழமாக வெளிப்படுத்திய விதத்திற்காகவும் தலைமுறை கடந்து ரசிகர்களை கவர்ந்த திறமைக்காகவும் அவர் என்றென்றும் அன்போடு நினைவு கூறப்படுவார். நாடகத் துறையிலும் அவருக்கு ஆழமான ஈடுபாடு இருந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் சாந்தி என்று பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.