தேமுதிக கட்சி தற்போது பெரிய அளவில் செயல்படாவிட்டாலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா அவர்கள் அடிக்கடி ஏதாவது பிரச்சனைகளை பற்றி ஆவேசமாக பேசிக்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு பற்றி பேசிய பிரேமலதா பேருந்து ஓட்டையிலிருந்து ஒரு குழந்தை விழுந்த பின் ஆய்வு செய்ய ஆரம்பிப்பார்கள். அதன்பின் இப்போது கள்ளச்சாராயம் அது ட்ரெண்டிங்கில் உள்ளது தற்பொழுது கள்ளச்சாராயத்தை பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

நான் கேட்கிறேன் முப்பதாயிரம் கோடி குற்றச்சாட்டு திரு ஸ்டாலின் மீதும் அவரது மகன் மீதும் குற்றச்சாட்டு உள்ளதே அதைப் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதில் அளிக்கிறார்களா?.
இங்கு போட்டோ சூட் ஆட்சி தான் நடக்கிறது மனசு ரொம்ப பாதிச்சிருக்கு எனக்கு எல்லோரையும் நேரடியாக சந்தித்து அவங்க குடும்பங்களை பார்க்கும் போது என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வருகிறது என்று கூறிய அவர் G SQUARE பற்றி எல்லா இடங்களிலும் ரைட் போய்க் கொண்டிருக்கிறது அதைப்பற்றி யாரும் வாய் திறக்கிறார்களா என்பதை நீங்கள் தான் கேட்க வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.