Thursday, September 10, 2026
-- Advertisement--

பிரகாஷ் ராஜுக்கு பிடிவாரண்ட்.. பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் பிர​காஷ் ராஜ் தமிழ்​நாடு, கர்​நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்​களில் வாக்​காளர் அடை​யாள அட்டை வைத்திருப்​ப​தாகக் கூறி தொடரப்​பட்ட வழக்​கில் பெங்​களூரு நீதிமன்​றம் அவருக்கு பிடி​வாரண்ட் பிறப்​பித்​துள்​ளது. பெங்​களூருவை சேர்ந்த வழக்​கறிஞர் திலீப் குமார் கடந்த மார்ச்சில் பெங்​களூரு 48-வது கூடு​தல் முதன்மை அமர்வு நீதிமன்றத்​தில் நடிகர் பிர​காஷ் ராஜுக்கு எதி​ராக மனு ஒன்றை தாக்​கல் செய்​தார்.

அதில்,”இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் விதி​முறை​களின்​படி 18 வயது நிரம்​பிய நாட்​டின் குடிமகன் ஒரு மாநிலத்​தில் மட்​டுமே வாக்​காளர் அடை​யாள அட்டை வைத்​திருக்க வேண்​டும். ஆனால் நடிகர் பிர​காஷ் ராஜ் கர்​நாட​கா, தமிழ்​நாடு, தெலங்​கா​னா, ஆந்திரா ஆகிய மாநிலங்​களில் வாக்​காளர் அடை​யாள அட்டை வைத்​துள்​ளார். இது சட்​ட​விரோத​மானது.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று கோரி​யிருந்​தார். இந்த மனுவை விசா​ரணைக்கு எடுத்​துக்​கொண்ட நீதி​மன்​றம், பிரகாஷ் ராஜ் நீதி​மன்​றத்​தில் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்குமாறு கடந்த ஏப்​ரலில் உத்​தர​விட்​டது. ஆனால் அவர் நேரில் ஆஜராக​வில்​லை. இதையடுத்து இவ்​வழக்கு நேற்று மீண்டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது பிர​காஷ் ராஜ் மீண்​டும் நீதி​மன்​றத்​தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதி​மன்​றம், பிர​காஷ் ராஜுக்கு எதி​ராக ஜாமீனில் வெளிவர முடி​யாத பிடி​வாரண்ட் பிறப்​பித்​து உத்​தர​விட்​டது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles