இந்திய இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் உலக நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே தொடரில் கார்ல்சனை முதல் முறையாக கிளாசிக்கல் செஸ்ஸில் தோற்கடித்திருந்த பிரக்ஞானந்தா, தற்போது மீண்டும் அதையே சாதித்துள்ளார்.
கடும் போட்டிகளுக்குப் பிறகு 62-வது மூவில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். கார்ல்சன் போட்டியிலிருந்து தோல்வியை ஒப்புக் கொண்டு விலகினார்.
பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் வைபவ் சூரி, “கார்ல்சனை வெல்வது சாதாரண விஷயம் அல்ல. மேக்னஸ் என்றால் மேக்னஸ்தான்.. கார்ல்சனுக்கு எதிராக அதிகமான தயாரிப்புகள் தேவைப்படுவதாகவும், அவர் அரிதாக கிளாசிக்கல் போட்டிகளில் விளையாடுவதால் தொடக்கத்தில் எந்த அதிரடி மூவ்-ஐ தேர்வு செய்வார் என்பதை கணிப்பதே கடினம்.” என்றார்.










