Friday, April 26, 2024
-- Advertisement--

பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார்..!! மீண்டும் வருவார்.. நெடுமாறன் அறிவிப்புக்கு பல கட்சிகள் மறுப்பு..!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இவர் பல வருடங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.

ஆனால் தற்பொழுது பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார் என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெற்றி குமரன் மறுப்பு தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பழ. நெடுமாறன் பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார் என்று அறிவித்தார் . இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார் . அதில் அவர் கூறியுள்ளதாவது:

சர்வதேச சூழலில் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு விடுத்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழின தேசிய தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது . இந்த சூழலில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இதுவரை பிரபாகரனை பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட அனைத்து வதந்திகளுக்கும் இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். கூடிய விரைவில் மக்களின் விடியலுக்கான திட்டத்தை அவர் அறிவிக்க உள்ளார். உலக தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க வரும் முன்வருமாறு வேண்டுகிறோம்.

விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்று அனுமதிக்க வில்லை.

எந்த காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழர் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தால். இந்துமாக்கடலில் ஆதிக்கம் சினாவின் பிடியில் சிக்கு அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் இந்த அறிவிப்பை நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெற்றி குமரன் மறுத்துள்ளார். இதே போல் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக்கும் பிரபாகரன் குறித்து குறிப்பிடாமல், போலியான நம்பிக்கைகளை தருவது, மக்களை மடைமாற்றம் செய்யவே அன்றி வேறில்லை என மறுத்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles