Saturday, November 2, 2024
-- Advertisement--

பிரீமியர் ஷோக்கு முன்பே இணையதளத்தின் திருட்டுத்தனமாக வெளியான பொன்னியின் செல்வன் 2 …!!! அதிர்ச்சியில் படக்குழுவினர்.

மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள திரைப்படம் பொன்னின் செல்வன். இப்படத்தில் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏற்கனவே வெளியான முதல் பாகம் ரிலீஸ் ஆகி 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வரிசையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகி உள்ளது. அவை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இன்று உலகம் முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் படத்தை காண ரசிகர்கள் பலர் ஆவலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

முதல் ஷோவை பார்க்க கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் என பலரும் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படம் காண திரையரங்குகளுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆன சில மாதிரி நேரங்களிலேயே அப்படத்தை பைரஸி தளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட்டு உள்ளனர்.

இதனை அறிந்த படக் குழுவினர் மிகுந்த அதிர்ச்சியை அடைந்துள்ளது. இப்படத்தின் லிங்குகளை டெலிகிராம் போன்ற சமூக வளையங்களில் பகிரவிட்ட வருகின்றனர். இதனால் இப்படத்தின் வசூல் பாதிக்கும் என பட குழுவினர் வேதனையில் உள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரீமியர் ஷோ வெளிநாடுகளில் இன்று அதிகாலையே திரையிடப்பட்டது.

அங்கிருந்து தான் யாரோ படத்தை முழுமையாக வீடியோ எடுத்து பைரஸி தளங்களில் பதிவேற்றி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க படக் குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles