Tuesday, September 8, 2026
-- Advertisement--

‘துரந்தர்’ பிஜிஎம்முடன் மோடிக்கு வரவேற்பு.. பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் வைரல் வீடியோ!

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பிரான்ஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆரத்தழுவி வரவேற்பு அளித்தார். பின்னர் அந்நாட்டு முறைப்படியும் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கும் இம்மானுவேல் மேக்ரான், துரந்தர் பட பிஜிஎம் இணைத்து வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி 6 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ், சுலோவோக்கியா, ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக பிரான்ஸ் சென்றார். பிரான்ஸ் நாட்டில் உள்ள நீஸ் நகரில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற இமானுவேல் மேக்ரான், இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்த வீடியோவிற்கு பிஜிஎம் ஆக துரந்தர் படத்தின் பாடலான ஆரி ஆரி (Aari Aari) பாடலை பிஜிஎம் ஆக போட்டு பதிவிட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில், பிரதமர் மோடியை கைகுலுக்கி வரவேற்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பின்னர் ஆரத்தழுவியும் வரவேற்பு கொடுக்கிறார். பின்னணியில் ஆரி ஆரி என்ற மியூஸிக் இசையுடன் வீடியோ ஓடியது.

செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், வர்த்தகம், விண்வெளி மற்றும் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான விவாதங்களில் இரு தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர். பிரான்ஸ் அதிபரை சந்தித்தது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் மோடி பதிவிட்டு இருந்ததாவது:- எனது நண்பரும் பிரான்ஸ் அதிபருமான மேக்ரானுடன் இன்று நடைபெற்ற சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை கருத்தில் கொண்டு, இருதரப்பு உறவை தனித்துவமான முக்கியமான கூட்டாண்மை என்ற உயர்ந்த நிலைக்கு மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். பாதுகாப்பு, தொழில்நுட்பம், விண்வெளி, தேசிய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், இன்னோவேஷன் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து எங்கள் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது” என்றார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles