முதுமலை காடுகளை சுற்றிப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கேமோ பினாஜ் டி-ஷர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டது. திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு என்றுமே பிரத்தேக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக வந்த பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்றார்.

அப்போது புலிகள் காப்பகத்தில் 22 கி.மீ சவாரி செய்தார். யானைகள் முகாமில் யானைக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தார். ஆஸ்கார் பாகன் தம்பதியை சந்தித்து பாராட்டினார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி அணிந்திருந்த உடை புகைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

இந்த புகைப்படங்களில் பிரதமர் அணிந்திருந்திருக்கும் டி ஷர்ட் திருப்பூர் சென்னை சில்க்ஸ் குழுமத்தில் எஸ் சி எம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. ராணுவ வீரரை போன்ற கம்பீரமான உடையுடன் பிரதமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து எஸ்சிஎம் நிறுவன நிர்வாக இயக்குனர் பரமசிவம் கூறுகையில் கடந்த 15 ஆண்டுகளாக கேமோ பினாஜ் டி ஷர்ட் மற்றும் பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறோம்.

25 நாடுகளுக்கு மேல் ஆடைகளை ஏற்றுமதி செய்து தருகிறோம். இந்த ஆடைகள் நாடு முழுவதும் டெகத்லான் ஷோரூமில் விற்பனை செய்யப்படுகிறது. காடுகளில் வேட்டைக்கு செல்கிறவர்கள், சுற்றி பார்க்க செல்கிறவர்கள், மலையற்ற பயிற்சி மேற்கொள்கிறவர்கள் இதுபோன்ற ஆடைகளை வாங்கி செல்வார்கள். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆடைகள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

100% காட்டனால் இவை தயாரிக்கப்படுகிறது. வியர்வை தேங்காத வகையில் இயற்கையான பறைசாற்றும் வகையில் தரமும் டீ சர்ட் நிறமும் இருக்கும் பிரதம நரேந்திர மோடியின் முதுமலை பயணத்திற்காக பிரதமர் அலுவலக அதிகாரிகள் குழு பெங்களூருவில் உள்ள டெகத்லான் ஷோரூம் ஆடைகளை வாங்கி உள்ளனர். திருப்பூரில் தயாரான கேமோ பினாஜ் ஆடையை பிரதமர் அணிந்து ஜங்கிள் சவாரி சென்றபோது கம்பீரமாக காட்சியளித்தது. அவரது டி-ஷர்ட்டும் பலரையும் கவர்ந்துள்ளது இது திருப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளது.
A special day, in the midst of floral and faunal diversity and good news on the tigers population…here are highlights from today… pic.twitter.com/Vv6HVhzdvK
— Narendra Modi (@narendramodi) April 9, 2023