ஆர்த்தி இவர் இறுதி ஆண்டு BCA படித்து வருகிறார். சிறு வயதிலே வில்சன் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு தவித்து வந்து தற்பொழுது படிக்க வேண்டும் என்ற ஆசையோடு போராடி BCA இறுதி ஆண்டுவரை வந்து உள்ளார். அவருடைய தந்தையும் ஆர்த்திக்கு உறுதுணையாக இருந்து படிக்கவைத்து உள்ளார்.

ஆர்த்திக்கு இருக்கும் நோய் அறிந்து மனம் நொந்து போன அவரது தந்தை ஆட்டோ ஓட்டி அவருக்கு மருத்துவ செலவையும் பார்த்து வந்து இருக்கிறார். தற்பொழுது அந்த நோயின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் ஆர்த்திக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவரது தந்தை தவித்து வருகிறார்.
வில்சன் நோய் என்பது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளான கல்லீரல் மற்றும் மூளையில் அதிகளவிற்கு copper படிந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகளை செயல் இழக்க செய்யும் நோய். இந்த நோயினால் ஆர்த்தி சிறுவயதில் இருந்து பாதிக்கப்பட்டு வந்து இருக்கிறார்.

இவர் பள்ளியில் படிக்கும் போது உடல் நிலை முடியாமல் போய் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டு உள்ளார். அதனை தொடர்ந்து நிறைய அறுவை சிகிச்சை செய்து உள்ளனர். இவை எல்லாம் செய்தும் பல லட்சங்கள் செலவு செய்தும் இன்னும் மருத்துவ செலவு எல்லை மீறி போகி கொண்டு இருப்பதை உணர்ந்த ஆர்த்தியின் தந்தை மருத்துவ செலவிற்கு போதிய தொகை இன்றி தவித்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் மேலும் (hepaticojejunostomy surgery ) அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் மனம் நொந்து போன அவர் உதவி நாடி வருகிறார்.
தயவு செய்து உதவுங்கள் : Venkatesan (Aarthi’s Father): +91 9941878329.
AARTHY DIAGONSIS REPORT


