தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் சர்ச்சைக்குள்ளான விஷயம் என்றால் அது வனிதாவின் திருமணம் பற்றி தான். தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார்.
தன் சொந்த வாழ்க்கை காரணமாக சினிமாவை விட்டு விலகி தனது மகளுடன் தனிமையில் வசித்து வந்த இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து பெற்று உள்ளது. இந்நிலையில் வனிதா மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். அதன் மூலம் மிகப்பெரிய டிஆர்பி இவர் பெற்றார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் சீரியலில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் மூன்றாவதாக திருமணம் செய்தார் எளிமையான முறையில் வீட்டிலேயே நடைபெற்றது. இவர் திருமணத்திற்கு பெரும் சர்ச்சைகள் கிளம்பின. அதற்கு தக்க பதிலடி ஒன்றின் மூலம் கொடுத்தார் வனிதா.
அதில் பீட்டர் பாலின் முதல் மனைவியின் மகன் இவர்கள் திருமணம் செய்வது ஏற்கனவே அவருக்கு தெரியும் என்று கூறினார். ஆனால் அதை தற்போது பீட்டரின் மகன் மகளை திருமணம் செய்வது எனக்கு தெரியாது என்றும் நான் வீட்டில் டின்னர் சாப்பிட மட்டுமே சென்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.