90ஸ் கிட்ஸ் ஃபேவரட் தொகுப்பாளர்களில் ஒருவர் பெப்சி உமா. பொதுவாக நடிகர், நடிகைகள் அவர்கள் நடித்த படத்தின் பெயரை தான் அடைமொழியாக வைப்பார்கள். ஆனால் 90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் தான் தொகுத்து வழங்கிய விளம்பரத்தில் பெயரை அடைமொழியாக கொண்டவர் தான் பெப்சி உமா.
90ஸ் காலகட்டங்களில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்றால் அது பெப்சி உமா மட்டும்தான் நைட்டீஸ் காலகட்டத்தில் இருந்து இப்போது வரை தொகுப்பாளர் என்று சொன்னவுடனே ரசிகர்கள் மத்தியில் வருவது பெப்சி உமா மட்டும்தான்.
கிட்டத்தட்ட தொடர்ந்து 15 வருடங்களாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறார். அதை தொடர்ந்து ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதெல்லாம் எனக்கு வேண்டாம் எனக்கு சின்னத்திலேயே போதும் என உறுதியாக கூறியிருக்கிறார்.
இப்போது சில வருடங்களாக சின்ன திரையை விட்டு விலகி இருக்கிறார். அவருடைய தெள்ளத் தெளிவான பேச்சு உச்சரிப்பு, சிரித்த முகம், உடை, அழகு என பலரும் ரசிக்கும் வகையில் இருந்து வருகிறார். கதாநாயகிகளுக்கு இணையாக அதிக ரசிகர்களை கொண்டவர் பெப்சி உமா. தற்போது அவர் எங்கே சென்றார் என்று ரசிகர்கள் அவரைத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்று இருந்தார். அப்போது அந்த விழாவில் நான் மீண்டும் சின்னத்திரைக்கு வரப்போகிறேன் என மாஸ் ஆன அப்டேட்டை கொடுத்துள்ளார். இந்த செய்தி 90 கிட்ஸ் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.