Thursday, March 28, 2024
-- Advertisement--

மெரினா கடற்கரையில் புத்தாண்டு பரிசாக மாற்றுத்திறனாளிகளுக்கென்றே பிரதேகமாக நடைபாதை அமைப்பு…!!!

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை என்றாலே மக்கள் மெரினா கடற்கரைக்கு சென்று வருவது வழக்கம். ஆனால் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு சென்றாலும் தொலைதூரத்தில் இருந்து மட்டுமே கடற்கரையை ரசிக்க முடியும்.

அதனை போக்கும் விதமாக தமிழக அரசு முன்னிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் பிற ஆதரவு குழுக்கள் இணைந்து சென்னை மெரினா கடற்கரையில் சக்கர நாற்காலியில் செல்லக்கூடிய தற்காலிக
நடைபாதையை உருவாக்கியுள்ளனர். இவை டிசம்பர் 27 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை ஆறு நாட்கள் பிரத்தியேக நடைபாதையை அமைக்கப்பட்டுள்ளது. இதனை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கடலில் அலைகளை உணரும் வகையில் கடற்கரையில் ஒரு பகுதியில் நடைபாதையை அமைத்தது அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரைக்கு வந்த உடன் கடலைப் பார்க்க விருப்பம் மாற்றுத்திறனாளிகள் அங்குள்ள மாநகராட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள. ஊழியர்கள் அவர்களை அந்த நடைபாதையில் கடலுக்கு அருகில் அழைத்துச் செல்வார். இவர்களுக்கு என்றே பிரத்யேக வாகனங்களும் நகராட்சி சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருடந்தோறும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் நாளாக சென்னை மாநகராட்சி சில ஆண்டுகளாக சக்கர நாற்காலிகளை ஏற்பாடுகள் செய்து நடைபாதை அமைத்து மணலில் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி எலியட்ஸ் கடற்கரை மணலில் ரெயின்ட்ராப்ஸ் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடுகளை செய்தது.

அன்றைய தினம் 170க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு வந்ததாக கூறப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை அமைக்கப்படும் இந்த நடைபாதையை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதோடு மரத்தாலான பாதையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி திறந்துவைத்தார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles