நடப்பு ஐபிஎல் தொடரில் பைனல்ஸில் குஜராத்தை வீழ்த்தி, ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தத் தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்திய பெங்களூர், இறுதிப் போட்டியிலும் தனது முத்திரையைப் பதித்து சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிக்குப் பிறகு 3வது அணியாக ஒரு கலக்கல் சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.ஐபிஎல் வரலாற்றில் சுமார் 17 ஆண்டுகள் கோப்பையை வெல்லாமல் இருந்த ஆர்சிபி அணி கடந்த சீசனில் கோப்பையைக் கைப்பற்றியது.
இந்த சீசனிலும் அந்த முமெண்ட்டத்தை தொடர்ந்த ஆர்சிபி, நடப்பு 2026 சீசனின் இறுதிப் போட்டியிலும் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது!
தன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கேப்டன்களான எம்.எஸ்.தோனி மற்றும் ரோஹித் சர்மா என்ற இருபெரும் ஜாம்பவான்களின் வரிசையில், தற்போது ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரும் இணைந்து சாதனைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் 19 ஆண்டுக்கால வரலாற்றில், ஆர்சிபிக்கு முன்னதாக இந்த இமாலயச் சாதனையை வெறும் இரண்டு அணிகள் மட்டுமே செய்திருந்தன.










