Tuesday, November 5, 2024
-- Advertisement--

பாபா ராம்தேவின் பதஞ்சலி உள்ளிட்ட பல நிறுவனங்களின் தேனில் கலப்படம்..!! வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

சுத்தமான தேன் என்று தற்போது இந்தியாவில் விற்கப்படும் பல தேன்களில் கலப்படம் கலந்து இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிகவும் தூய்மையான தேன் தற்பொழுது மிக குறைவாக உள்ளது என ஆய்வில் தகவல் வெளிவந்துள்ளது. சாமியார் பாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி உள்ளிட்ட பல இந்திய நிறுவனங்களின் தேனில் சர்க்கரை பாகு கலப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற சாமியார்களில் ஒருவராக வலம் வருபவர் பாபா ராம்தேவ், பதஞ்சலி என்ற பெயரில் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை மலிவான விலையில் விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிறுவனத்தின் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் தேனும் ஒன்று. இந்தியாவில் முன்னணியில் உள்ள விற்பனை நிறுவனங்களான டாபர், பதஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலம் மற்றும் பதப்படுத்தப்பட்ட தேனை ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில் அவற்றின் தரத்திற்கான சோதனை செய்யப்பட்டது. அதில் பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்களின் தேனில் சர்க்கரை கலந்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles