Saturday, April 20, 2024
-- Advertisement--

இரவின் நிழல் விமர்சனம் | IRAVIN NIZHAL REVIEW

கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமா மிகப்பெரும் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கின்றது அதற்கு உதாரணமாக ஆக விக்ரம் ராக்கெட்ரி போன்ற படங்களின் கதை அம்சங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டன. தற்பொழுதுஅடுத்த வரிசையில் இணைந்திருக்கும் படம்தான் இரவின் நிழல் பார்த்திபன் உடைய வெற்றிப் படங்களான கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒத்த செருப்பு வரிசையில் அடுத்த ஒரு நான்லீனியர் சிங்கிள் ஷாட் படமாக
94 நிமிடங்கள் நம்மை இருக்கையிலேயே கட்டிப் போட்ட படம் தான்
இரவின் நிழல்.

தமிழ் சினிமா வரலாற்றில் எந்தவித ரீபிட் ஷாட் பல முறை. இல்லாமல் ஒரே ஷாட்டில் எடுத்த படம்தான் இரவின் நிழல். பார்த்திபன் உழைப்பு வீண் போகவில்லை முதல் அரை மணி நேரம் படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதனை ஆராய்ந்து அலசி ஆராய்ந்து நம்மை புரிய வைக்கின்றார்.

அடுத்த 94 நிமிடங்கள் தான் திரைக்கதையை நம்முள் நிறுத்துகிறார். தனது குழந்தைப் பருவத்திலிருந்து தற்பொழுது வரை நடக்கின்ற தன்னுடைய வாழ்க்கையை மிக அழகாக வடிவமைத்து உள்ளார் சிறுவயதிலேயே தந்தையின் சந்தேகத்தால் தன் தாய் கொலை செய்யப்படுகின்றார். பின்பு தனது உறவினர்களால் வளர்க்கப்படுகின்ற அவர் உறவினர்களால் தூக்கி வீசப்படுகின்றன பின்பு அவன் மெரினா பீச்சில் காவலர் ஒருவரால் பாலியல் இச்சைக்கு ஆளாகிறார் அதனையும் தாண்டி மூன்றாம் பாலினம் பெண் ஒருவரிடம் அடைக்கலம் தேடி செல்கிறார் ஆனால் அந்த பெண்மணி இவனை கஞ்சா விற்க செய்கிறார்.

இவர் கஞ்சா விற்க செய்யும்போது செல்லும்பொழுது மீண்டும் போதை ஆசாமிகளால் துரத்தப்படுகின்றான்.பின்பு அங்குள்ள மார்க்கெட்டில் அவன் வேலை செய்யும் பொழுது ஒரு பெண்ணிடம் காதல் வயப்படுகிறார் அந்தப் பெண்ணும் இவரை காதலிக்கிறார் ஆனால் அந்த பெண் ஒரு நாள் ஒரு ரவுடியிடம் இருக்கும் பொழுது அவன் பார்த்து விடுகிறான் உடனே அந்தப் பெண்ணிடம் நான் உன்ன தான் லவ் பண்ணேன் ஏன் இப்படி பண்ண எனக் கேட்கும் பொழுது அவள் என் கையை பாத்தியா எவ்வளவு வளையல்கள் எல்லாம் தங்கம் என்று சொல்ல அவன் பணம்னா என்ன வேணாம்னு பண்ணுவீங்களா என்று சொல்லிவிட்டு பணத்தை தேடி அலைகின்றான் பின்பு ஆந்திரா சென்று அங்குள்ள கோயிலில் தெய்வ கடாக்ஷம் ஆக இருக்கின்ற ஒரு பெண்ணிடம் காதல் வயப்படுகிறார் அந்தப் பெண்ணும் அவருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணம் முடித்து சென்னை வருகின்றார் அங்கு ஒரு பாயின்(மூஸ்லீம்) உதவியுடன் வட்டிக்கு கடன் வாங்கி கடை வைக்கின்றார் ஆனால் எதிர்பார்த்த அளவு கடையின் வியாபாரம் செல்லாததால் கடன் ஆகிவிடுகின்றான் nகடன் கொடுத்தவன் அவனது மனைவியை புள்ளத்தாச்சி என்று பார்க்காமல் கடன் கொடுத்தவர்கள் அவன் மனைவியை நிர்வாண படுத்துகிறார்கள் அதனை தாங்காமல் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள் அந்த குற்ற உணர்ச்சி மேலும் அவனை கொல்கிறது.

பின்பு அமைதி தேடி பரமானந்த ஆசிரமம் செல்கிறான் அந்த பரமானந்தம் போலி சாமியார் அவரது மனைவியாக வரும் ராஜாத்தி கர்ப்பமாக பணத்திற்கு ஆசைப்பட்டு தனது கணவனான பரமானந்தமே போலீசிடம் காட்டிக் கொடுக்கிறாள் பின்பு அவள் அங்குள்ள புதையலில் கிடைக்கின்ற தங்க நகையை எடுத்துக்கொள்ள செல்லும்பொழுது அதற்கு உதவியாக இருக்கும் அவன் அவளை புள்ளத்தாச்சி என்று பாராமல் கொன்று விடுகின்றார். அந்தக் குற்ற உணர்ச்சியும் அவனை கொள்கிறது.,
பின்பு அந்த தங்க நகைகளை கொள்ளையடித்து மிகப் பெரும் பணக்காரன் ஆகிறான். அனைவருக்கும் வட்டிக்கு பணம் கொடுத்தும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பினன்ஸியர் ஆகவும்இருக்கின்றார்.

பின்பு அவனிடம் கடன் வாங்கிய ஐயர் அவருடைய மகளை பணத்திற்காக மூன்றாவதாக திருமணம் செய்து கொள்கின்றான். அவளுக்கு பிறந்த செல்ல மகளான அற்புதா மேல் கொள்ளைப் பாசம் ஆனால் அற்புதாவின்வகுப்பு நண்பனான ஆனந்த்
அவளுடைய பெற்றோர் அவனுடைய கடன் தொல்லையால் இறந்து விடுகின்றார்கள் அதைக் கேள்விப்பட்ட அற்புதா டாடி என் கிளாஸ்மேட் ஆனந்தோட அப்பா அம்மாவை கொன்னுட்டீங்க லே என்று சொல்லி அவளும் அவள் தாயாரும் இவனை விலகி விடுகிறார்கள். இறுதியில் குற்ற உணர்ச்சி அவனை நகர வேதனையில் தள்ளுகிறது.

இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான், தன் பாவத்திற்கு தானே பரிகாரம் செய்து கொள்கிறான். அதனை கடுவெளி சித்தர் பாடிய பாவம் செய்யாது மகனே என்ற ஒரு பாடலின் மூலம் வெளிப்படுத்துகின்றார். படத்தில் அவனாக் நான் சொல்கின்ற கதாபாத்திரம் பெயர் நந்தா. யார் அந்த நந்தா நம்ம பார்த்திபன் சார் தான். சலங்கை கட்டி ஆடி இருக்கின்றார்.மூன்று பெண்களாக பிரிகிடா ஆந்திரா பெண்ணாகவும், மார்க்கெட் பெண்ணாக சினேகா மற்றும் ஐயர் பெண்ணாக பிரியங்கா ரூட் மிக அழகாக நடித்துள்ளார்கள்.

SCORE:

ராஜாத்தியாக வரலட்சுமி சரத்குமார் ஒகே ஆக்டிங்.

பின்னணி இசையில் பாடல்களில் ஏ ஆர் ரகுமான் மிகப்பெரும் சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் 94 நிமிடங்கள் கேமராவை தன் பிடியில் இருந்து கீழே விடவில்லை.

கலை இயக்குனர் அழகாக செட் வடிவமைத்துள்ளார். மொத்தத்தில்
உலக வரலாற்றில் முதன்முறையாக Non Linear Single ஷாட் மூவியாக
அமைந்துள்ள இப்படம் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம்பெற்றுள்ளது.

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இயக்கம் என இப்படத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் மிகப்பெரும் இமாலய சாதனையை செய்துள்ளார் பார்த்திபன்.

படத்தில் சில வசனங்கள் சகிக்க முடியவில்லை என்றாலும் அதை விட்டாலும் ஆனால் இப்படம் நம் மனதை விட்டு நீங்காது.

வித்யாசமான சினிமாவை வரவேற்காமல் விட்டுவிட்டால் வித்தியாசமே இல்லாத சினிமா தான் மிஞ்சும். வாழ்த்துக்கள் பார்த்திபன் சார்.

ரேட்டிங்: 5/5
இரவின் நிழல் – நீங்காத நிழல்

VERDICT: MEGA HIT

Review by Ramprakash Singaravel

ஓ சொல்றியா மாமா பாடலுக்கு பிரபல நடிகருடன் செம ஆட்டம் போட்ட சமந்தா…!!! சமந்தாவின் நெளிவு சுளிவான நடனத்தை பார்த்து மிரண்டு போன பாலிவுட்..!!!
 
சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு செய்த சேட்டை…!!! மொத்த யூனிட்டே வயிறு குலுங்க சிரிச்ச சம்பவம்…!!! அப்படி என்ன செய்துள்ளார் தெரியுமா..!!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles