கொரானா பரவி வரும் இந்த அசாதாரண சூழலில் இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றனர். சீனாவில் உள்ள உணவகங்களில் வேலை செய்துவந்த ராமநாதபுரம் மாவட்டம் புலியூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர் கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு திரும்பினர்.
கடந்த ஆறு மாதமாக வேலை இல்லாமல் சொந்த ஊரில் இவர்கள் மிகவும் வறுமையில் வாடி வருவதாகவும் இவர்கள் மீண்டும் சீனா என்று செல்வோம் என்று நாளை எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து 12 வருடங்களாக சீனாவில் வுஹான் மாகாணத்தில் உள்ள உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வரும் வேலை செய்து வருபவர் திரு நாவுக்கரசு கொரானா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் நான் கடந்த 12 ஆண்டுகளாக சீனாவில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தேன். கடந்த 6 மாதத்திற்கு முன்பு என் சொந்த ஊருக்குத் திரும்பினேன். இந்திய பரோட்டாவிற்கு சீனாவின் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி வாழும் நான் என் கிராமத்தை விட்டு 12 வருடங்களாக சீனாவில் புரோட்டா மாஸ்டர் வேலைக்காக அங்கு உள்ள உணவகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன்.
எனக்கு பரோட்டா போடுவது மட்டும்தான் தெரியும் வேறு எந்த கைத்தொழிலும் எனக்கு தெரியாது. ஆனால் இங்கு உள்ள பரோட்டா கடைகளில் வேலை செய்தாலும் நான் சீனாவில் வாங்கிய சம்பளத்தை என்னால் இங்கு வாங்க முடியாது, என்று தினமும் 100 முதல் 300 ரூபாய்க்கு சவுண்ட் சர்வீஸ் கடையில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறேன். இது எனக்கு பத்தாது மேலும் இது எனது நிரந்தர வருமானமும் கிடையாது. அதனால் மீண்டும் சீனா செல்ல நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.