இத்தாலி பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்லெட் பரிசளித்த பிரதமர் மோடி உள்நாட்டுத் தயாரிப்பு (சுதேசி) பொருள்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பேசியிருந்தார்.
இதற்கு, இந்தியாவின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது. பிரதமரின் இந்த பேச்சு தங்களுக்குப் பெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்கள் அனைவரும் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஆதரிக்க வேண்டும் என்றும், அதுவே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
அப்போது, இந்தியர்களின் உணர்வோடு கலந்த உள்நாட்டு பிராண்டுகளுக்கு உதாரணமாக பார்லே நிறுவனத்தைக் குறிப்பிட்டு பேசினார்.உள் நாட்டுத் தொழில்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் பிரதமருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.










