கோயம்புத்தூரை சேர்ந்த பவித்ரா என்ற பெண் தனது பயிற்சியாளர் சந்தீப் உடன் இணைந்து திருவனந்தபுரத்தை அடுத்து வர்க்கலா கடற்கரை பகுதியில் பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பணி முடியாத நிலையில் 50 அடி உயரத்தில் மின்கம்பம் இருந்தது. சாகசத்திற்கு சென்ற இருவரும் காற்றின் திசை மாறி 50 அடி உயர மின் கம்பத்தில் சிக்கிக் கொண்டனர். இருவரும் மின்கம்பத்தில் சிக்கியதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை அடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினரும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மின்கம்பியில் சிக்கியிருந்த இருவரையும் நிற்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருவரும் மின் கம்பத்தில் இருந்து கீழே விழுந்து விடாமல் இருக்க ஏற்பாடுகளை செய்தனர். இருவருக்கும் பொருத்தப்பட்டிருந்த வலையில் விழுந்து சிறுசிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
விபத்து குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் இயக்கியது கைகளால் இயக்கும் பாராகிளைடிங் ஆகும். காற்றின் திசை திடீரென மாறுபட்டதால் மின்கம்பத்தில் சிக்கிக் கொண்டோம் என கூறியுள்ளார்.