பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து கொண்டிருப்பவர் ஸ்டாலின். இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியல் தான் முதல் சீரியல், அதை தொடர்ந்து ஆண்டாள் அழகர் என இவர் சீரியல் பயணம் நீண்டு கொண்டே போகிறது.
இவர் கிராமத்து கதைகளை இயக்கும் இயக்குனர் சிகரம் பாரதிராஜாவின் சொந்தம் ஆவர். இவர் தற்போது ஊரடங்கு காரணத்தில் முழு நேர விவசாயியாக மாறிவிட்டேன் என நேர்காணலில் கூறியுள்ளார்.

இவர் பேட்டியில் கூறுகையில் மண்மணம் மாறாத படங்களை இயக்கும் பாரதிராஜாவின் நிழலில் வளர்ந்ததால் எனக்கும் மண் மீது அதிகம் பாசம் உண்டு. எங்கு சென்னை சென்று விட்டால் விவசாயத்தை விட்டுவிடுவோமோ என்று பயம் என்றும் எனக்குள் இருக்கும்.

இவர் சென்னையில் சீரியல் படப்பிடிப்பின் போது மட்டும் தான் இருப்பார். மத்தநேரங்களில் இவர் தேனிக்கு சென்று விவசாயத்தில் ஈடுபட்டுவிடுவார். இவர் தற்போது ஊரடங்கு காரணமாக முழு நேர விவசாயியாக நான் மாறிவிட்டேன், படப்பிடிப்பு முடிந்ததும் முதலில் வீட்டிற்கு கூட செல்லாமல் தோட்டத்திற்கு தான் செல்வேன், அப்போது மரம், செடிகள் அசைவது என்னை வரவேற்பது போல் இருக்கும், அந்த சுகம் விவசாயிக்கு தான் தெரியும்.
இவ்வாறு அவர் ஒரு பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.