தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் பாக்யராஜ். தமிழ் சினிமா வரலாற்றில் இயக்குனர் ஒருவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தது இவருக்குத்தான்.

இவர் நடிகை பூர்ணிமாவை பாக்யராஜை இரண்டாவதாக திருமணம் செய்து சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகனும் உள்ளனர். நடிகர் சாந்தனு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் நடிகர் ப்ரிதிவிராஜுடன் சரண்யா பாரிஜாதம் படத்தில் நடிகையாக அறிமுகம் செய்தார். இவருக்கும் பிரித்திவிராஜிற்கும் காதல் உள்ளதாக கூட வதந்திகள் எழுந்தன. இவருக்கு மூன்று படங்கள் மட்டுமே வாய்ப்புகள் வந்தன.

இந்நிலையில் இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த தமிழரை காதலித்து காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்த செய்திகள் இணையத்தில் தீயாய் பரவின.

இதில் இருந்து மீண்ட சரண்யா தற்போது வெறுப்பில் உள்ளார்.எதிலும் கலந்து கொள்ளாமல் தனிமையில் இருந்து வருகிறார்.