சர்வதேச 44ஆவது சதுரங்க போட்டிகளை தமிழக அரசு மிகப் பிரமாண்டமாக நடத்தி வருகிறது. நேற்று சென்னைக்கு பிரதமர் மோடி அவர்கள் வந்து இந்த போட்டிகளை துவக்கி வைத்தார். பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. எப்போதும் எதிர் துருவங்களாக அரசியல் செய்து வரும் இருவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசிய புகைப்படங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இது ஒரு புறம் இருக்க சர்வதேச சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்வதற்காக 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த போட்டிக்காகவே வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏகப்பட்ட வீரர்கள் பங்கேற்றார்கள் பிரம்மாண்ட வரவேற்புடன் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த 16 வீரர்கள் கலந்து கொண்டனர். பாகிஸ்தானில் இருந்து சென்னை வந்த சதுரங்க வீரர்களுக்கு உற்சாக வரவேற்பை கொடுத்து அசத்தியது தமிழக அரசு.
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து மகாபலிபுரம் வந்த 16 பாகிஸ்தான் வீரர்களும் மதிய உணவு உண்டு மகிழ்ந்தனர் அந்த நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து அவர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பாகிஸ்தான் விளையாட்டு துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இன்னும் 24 மணி நேரத்திற்குள் நீங்கள் பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என்று காரராக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒரு காரணமும் சொல்லாமல் நீங்கள் உடனே பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என்று அவர் கூறிவிட்டு அழைப்பை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த தொலைபேசி அழைப்பிற்கு பிறகு கொஞ்சம் டென்ஷனாக இருந்த வீரர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் இந்த விஷயத்தை தெரிவிக்க இந்த விஷயம் தமிழக அரசுக்கு செல்ல அவர்கள் உடனே பாகிஸ்தானுக்கு திரும்புவதற்கான டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து அனுப்பியது இந்திய அரசு.
பாகிஸ்தானில் இருந்து இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த சதுரங்க வீரர்கள் அளித்த பேட்டியில் இந்த சதுரங்க போட்டிகளில் கலந்து விளையாட மகிழ்ச்சியாக தான் வந்தோம் ஆனால் விளையாடக்கூடாது உடனே நாடு திருமுகங்கள் என்று எங்கள் அரசாங்கம் எச்சரிக்கை செய்ததால் உடனே நாங்கள் எங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புகிறோம் எங்கள் அரசாங்கத்தின் நிபந்தம் காரணமாகவே இந்த போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை இது மனதளவில் உங்களை வருத்தம் அடைய வைத்துள்ளது ஆனால் டெல்லியில் நாங்கள் இருந்தபோது சென்னைக்குள் நாங்கள் வந்த போதும் இந்திய அரசும் தமிழக அரசும் பத்திரிக்கையாளர்களும் எங்களுக்கு கொடுத்த வரவேற்பும் உற்சாகமும் மனம் நிறைவை கொடுத்தது அதனை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என்று உருக்கமாக பேசியவர்கள் சென்னையையும் மாமல்லபுரத்தையும் எங்கள் நினைவில் இருந்து பிரிக்க முடியாது என்று உணர்ச்சி வசமாக பேசி உள்ளார்கள்.
திடீரென்று பாகிஸ்தான் வீரர்களை ஏன் பாகிஸ்தான் அரசு அழைத்தார்கள் என்ற செய்தி இனி தான் தெரிய வரும்.