ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவுக்கு அனுமதி கொடுக்காமல் பல மாதங்களாக வைத்திருந்த ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றியவுடன் சில மணி நேரங்களிலேயே அந்த மசோதாவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
அந்த மசோதா உடனடியாக அரசு இதழில் வெளியிடப்படும் என்றும் உடனடியாக அமலுக்கு வந்தது என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் சூதாட்டம் நடத்தினால் மூன்று மாதம் சிறை 15 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர்கள், தொழில் அதிபர்கள், இன்ஜினியர்கள், பெண்கள் என்ற பல தரப்பட்ட மக்களும் ஈடுபட்டு பல லட்ச ரூபாய் மற்றும் சொத்துக்களை இழந்தனர்.இதனால் இதுவரை 46க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
இதனால் 2020 ஆம் நவம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 2021 பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் அக்டோபர் 19ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது ஆனால் ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருந்தார்.
மேலும் அந்த தீர்மானத்தில் ஒன்றிய அரசு மற்றும் குடியரசு தலைவர் தலையீட்டு மசோதா நிறைவேற்ற கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சில மணி நேரங்களிலேயே ஆன்லைன் தன்னை தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அழைத்து ஆளுநர் ஆர் என் ரவி கையெழுத்து விட்டார். அதை தொடர்ந்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட நடத்தினால் ஐந்தாயிரம் அபராதமும் மூன்றாம் மாதம் சிறதண்டனையும் விதிக்க சட்டம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.