Saturday, April 20, 2024
-- Advertisement--

கொரோனா நேரத்தில் வீட்டில் இருந்தபடியே இணையத்தின் வழியாக மாணவர்களுக்கு Class எடுப்பது எப்படி…!!! இதனை பயன்படுத்துங்கள்.

கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள நமது நாட்டில் ஊரடங்கு கடைபிடித்து வருகின்றனர் மக்கள். இந்த நேரத்தில் மாணவரக்ளுக்கு பாடம் கற்பிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் ஆசிரியர்கள். தற்பொழுது உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்த படியே இணையத்தில் வாயிலாக மாணவர்களுக்கு எப்படி கல்வியை கற்பிக்கலாம் என்று இதில் விளக்கமாக கூறி உள்ளேன்.

கற்றல் திறனை அதிகரிக்க கொடுக்கப்படும் கூடுதல் பணியான (assignment ) எழுதல் மூலம் இல்லாமல் தகவல் தொழில்நுட்ப உலகில் பயன்படும் கருவிகளான எட்மோடோ (edmodo ), கூகிள் வகுப்பறை (google classroom ) வழியாக கொடுக்கலாம் . இதன் மூலம் கொடுக்கப்படும் பணியினை மாணவர்கள் தங்கள் இருக்கின்றன இடங்களிருந்து செய்யலாம். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படுகின்ற பாடத்தின் பணியினை இணையதளத்தின் மூலமாகவும் கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் நான் மாணவர்களின் பணியினை (assignment )பார்வையிட்டு இந்த பயன்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு மதிப்பெண்களையும் அளிக்கின்றேன்.

மேலும் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் மாணவர்களின் பணிகள் சேமிப்பாகவே (save ) இருக்கும் . அவர்கள் எந்நேரத்திலும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்கள் காகிதங்களை பயன்படுத்துதல் குறைந்து தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் அதிகமாகின்றன.

மேலும் ஒரு மதிப்பெண் மற்றும் இரு மதிப்பெண் வினா-விடைகளை கற்க ஏதுவாக அவரகள் ஞாபகம் கொள்வதற்கு ஏதுவாக கஹுட் (kahoot) மொபைல் பயன்பாடினை கொடுத்தேன் .இந்த பயன்பாடு வினா விடை (quiz) உருவாக்க பயன்படுகிறது .இதன்மூலம் நடத்தப்படும் பாடத்தினை வினா விடையாக கொடுக்கும் பொழுது மாணவர்கள் அப்பாடத்தின் பகுதிகளை படித்து விடையளிக்கலாம். இதற்கு அந்த பயன்பாடு மதிப்பெண்கள் அளிக்கும். மொத்தம் வகுப்பறையில் உள்ள மாணவர்கள் யார் யார் கலந்து கொண்டுள்ளார்கள் அவர்களின் மதிப்பெண்களை ஆசிரியர்கள் தெரிந்துகொள்ளலாம்.இதுவும் மாணவர்கள் தங்கள் அளித்த வினா விடை பகுதிகள் சேமிக்கும் பயனாக செயல்படுகின்றது. www.kahoot.it/create இணையதளம் சென்று create பட்டன் மூலம் உருவாக்கி நடத்தும் பாடத்தினை வினா விடையாக கொடுக்கு பொழுது பாடத்தினை நன்கு அவர்கள் படிக்கின்றனர்.

கீழ்க்கண்ட new.edmodo.com இணையதளம் சென்று பணியினை உருவாக்கி மாணவர்களை பணியினை சமர்ப்பிக்க சொல்லி மதிப்பெண்கள் வழங்கலாம். இதனை classroom.google.com இணையதளத்தில் சென்றும் உருவாக்கி மாணவர்களுக்கு பணியினை கொடுக்கலாம்.

கீழே உள்ள படங்களில் மாணவர்கள் எட்மோடோ மற்றும் கூகிள் வகுப்பு மூலம் சமர்ப்பித்த pdf ,word பணியினையும் அவர்கள் எடுத்த மதிப்பெண்ணையும் கொடுத்துள்ளேன்.

மேலும் நான் எழுதி தயாரிக்கின்ற பாட பகுதிகளை கூகிள் டிரைவ் (google drive ) மூலமாகவும் வலைப்பூக்கள் மூலமாகவும் (blog ) பகிர்கின்றேன்.இதன் மூலம் மாணவர்கள் அந்த பாடப்பகுதியினை தரவிறக்கி கொள்ளலாம்(Download). இதன் மூலம் அவர்கள் கூடுதல் பாடத்தொகுப்பினை படித்து தேர்வில் எழுதலாம்.

மேலும் மாணவர்களை பாடத்தின் பகுதிகள் மட்டுமின்றி கூடுதல் பன்முக திறனை வெளிக்கொணர மற்ற கல்வி நிறுவனகளுக்கு சென்ற தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தும் , அறிவியல் கண்டுபிடிப்பு படைப்புகள் (science projects ) போஸ்டர் படைப்பு (poster presentation ) மூலமாகவும் ,கருவிகள் கொண்டும் செயல்முறைப்படுத்துகின்றனர். அதனால்தான் மாணவர்களிடம் அன்றைய செய்திகளை மாணவர்களிடத்து பகிர்ந்து கொள்வதில் மூலம் அவர்கள் உடன் நூலகம் சென்று அச்செய்திகளை சேமித்து வைகின்றனர் . பின்பு பலசெய்திகளை சேமித்து அறிவியல் படைப்புகளையாய் உருவாக்கி நடைமுறைபடுத்துகின்றனர் . மேலும் மின்புத்தகங்களை (e-books ) இணையத்தில் சென்று படிப்பதற்கான இணையதள முகவரியையும் (website address ) , மேலும் பல்வேறுபட்ட வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் நிறுவனங்களின் இணையதள முகவ்ரிகளையும் கொடுத்து அவர்கள் எந்தெந்த பணிகளுக்கு செல்கின்றனர் எனபதனை அறிந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பேன் .

மேல உள்ள www.padlet.com இணையதளம் சென்று மாணவர்களுக்கு என்னுடைய பாடத்தொகுப்பினையும் ,மாணவர்கள் என் வகுப்பு பற்றிய கருத்துக்களையும் அளிக்கும் இடமாக பாட்லேட் இணையதள முகவரி பயன்படுகிறது இதை விட மாணவர்கள் நான் வகுப்பில் கற்பிக்கும் முறை எவ்வாறு உள்ளது? மேலும் நான் எவ்வாறு மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதனை அவர்கள் தகவல் தொழில் நுட்பத்தில் பயன்படும் பாட்லெட் (padlet ) இணையதளப் பயனை உபயோகித்து தம்முடைய கருத்துக்களை பீடுபேக் (feedback ) முறையில் தெரிவிக்கலாம். இந்த பயன்பாடு ஒரு சிறந்த பயன்பாடாக அமையும். இதுபோல் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதுடன்,தற்கால சூழ்நிலைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் எனபதனை கருதி அரசு அறிவிக்கும் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்களுக்கு தேவையான செயல்முறைகளையும் நிறுவி அவர்களுக்கு உதவி புரிந்து கொண்டுள்ளேன். இதன் மூலம் மாணவர்களிடையே கற்கும் திறன் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக தேர்ச்சி விழுக்காடு என் பாடத்தில் அதிகரிப்பதை நான் கடந்த தேர்வுகளில் கண்டேன். நன்றிகள் .

சி.ராம்பிரகாஷ்
விரியுரையாளர்,
கணினி அறிவியல் துறை,
அண்ணா பல்கலைக்கழகம் – திருக்குவளை வளாகம்
நாகப்பட்டினம்-610204

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles