நீட் தேர்வு 2026 கடந்த மே மாதம் நடை பெற்றது .அப்போது நடந்த குழப்பத்தால் மறு நீட் தேர்வு நடக்க ஆலசோனை நடந்தது.பின்பு ஜூன் 21 மாணவர்கள் மறுபடியும் நீட் தேர்வு எழுதினார்கள். அப்போதும் நடைபெற்ற தேர்வில் இயற்பியல் வினாத்தாளில் 2 முக்கியமான பிழைகள் கண்டறியப்பட்டன. அதில் ஒரு கேள்விக்கு வழங்கப்பட்ட 4 விடைகளிலும் சரியான பதில் இல்லை.
ஒரு கேள்வியில் ஒரே ஒரு சரியான விடை இருக்க வேண்டிய நிலையில், இரண்டு விடைகள் (3 மற்றும் 4) சரியானவையாக இருப்பதாக கண்டறியப்பட்டது. பிறகு பதிலே இல்லாமல் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்வெழுதிய அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
அதனால் அந்தக் கேள்வி ரத்து செய்யப்படவுள்ளதாகவும், இதன் காரணமாக தேர்வெழுதிய அனைவருக்கும் அந்த கேள்விக்குரிய 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் 2 பதில்கள் இருந்த கேள்வியில் 2-ல் ஒன்றை எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகைமை தெரிவித்துள்ளது.
இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய நான்கு பாடங்களில் 45 கேள்விகள் என மொத்தம் 180 வினாக்கள் இடம்பெறும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இத்தேர்வின் மொத்த மதிப்பெண் 720 ஆகும்.










