Saturday, April 20, 2024
-- Advertisement--

திரும்ப வந்துட்டேனு சொல்லு…!!! நேரலையில் தோன்றி அதிர்ச்சி கொடுத்த நித்யானந்தா…!!! என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

நித்யானந்தா பெங்களூரில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். பெண் சீடர்களை கட்டாயப்படுத்தி அந்த ஆசிரமத்தில் நித்யானந்தா அடைத்து வைத்துள்ளார் என்றெல்லாம் செய்திகள் பரவியது நித்தியானந்தா மீது பாலியல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டது நிலையில் நித்தியானந்தா அங்கிருந்து தப்பி ஓடி வெளிநாடு சென்று தீவு ஒன்றை வாங்கியதாகவும் அந்த தீவிற்கு கைலாஸா என்று பெயர் வைத்ததாகவும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது.

நித்யானந்தா கைலாஸாவில் தனி ஆட்சி புரிந்து வருவதாகவும் பக்தர்கள் அமைதியாக வாழ கைலாசா நித்யானந்தா அழைக்கிறார் என்றும் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் நித்தியானந்தா உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் அவருக்கு என்ன நோய் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் புலம்பி வந்தார்கள் அவரது பக்தர்கள் அதுமட்டுமல்லாமல் சமாதி நிலையில் உள்ளேன் என்று நித்தியானந்தா கூறியதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.

நித்தி மீது தீவிர அன்பும் பக்தியும் வைத்திருக்கும் பக்தர்கள் நித்தி உடல்நிலைக்காக பிராத்தனைகள் செய்து வந்தார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க பிரபல நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் நித்தியானந்தாவை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் ஏதோ ஒரு விஷயம் அவரிடம் இருக்கிறது. என்னுடைய பெயர் பிரியா ஆனந்த் என்பதை மாற்ற கூட தேவை இல்லை அவரை திருமணம் செய்து கொண்டால் என்று பேட்டி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நித்தியானந்தா குரு பூர்ணிமாவை முன்னிட்டு பக்தர்களுடன் நேரலையில் உரையாடுவார் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.

பலர் நித்யானந்தா நேரலையில் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறி வந்த நிலையில் நித்தியானந்தா நேரலையில் தோன்றி தோன்றி உரையாடியுள்ளார். அதில் சமாதி நிலை பற்றி ஒன்று சொல்கிறேன். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், நம் எல்லோருக்குள்ளேயும் காலாவதி தேதி இல்லாத, காலாவதி ஆகாத முழுமையான ஒன்று இருக்கின்றது. அந்த காலாவதி ஆகாத, காலாவதி தேதி இல்லாத நிரந்தரமான ஒன்றோடு ஒன்றிணைப்பது தான் சமாதி நிலை.

நான் வளர்ந்த திருவண்ணாமலையில் நிறைய பேர் இருந்தார்கள். 80-களில் நான் அங்கு இருந்த போதே சமாதி நிலையில் 100 பேர் இருந்தார்கள். இன்று கூட அங்கு சிலர் இருக்கிறார்கள்.

நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன், அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கம் மற்றும் முடிவுகள் ஆகியவற்றை பார்க்கும்போது இந்த 3 மாத கால இடைவெளியில் நடந்தது உங்களுக்கு புரியும். இவ்வாறு நித்யானந்தா பேசி உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles