உலகெங்கும் பரவி வருகிறது கொரானா வைரஸ் சீனாவில் ஆரம்பித்த இந்த நோய்த்தொற்று தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த உயிர் கொல்லி நோயினால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். நிலையில் இந்தியாவில் தமிழகத்தில் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நோயிலிருந்து விடுபட தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் முகக் கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற நடைமுறைகளை பின்பற்றி வருகிறது தமிழக அரசு. இதன் காரணமாக தமிழகத்திலுள்ள நீலகிரி மாவட்டத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அளிக்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் இன்னோசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
இவரது இந்த உத்தரவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது போன்ற உத்தரவை பல மாவட்டங்களும் பின்பற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.