சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு நிறைய பேர் சென்றுள்ளனர். ஆனால் அதில் சாதித்தவர்கள் மிகவும் குறைவான அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயன் போல் திரையில் ஜொலித்து வருகின்றனர். முதல் முதலில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர் .
இவர் செய்தி வாசிப்பாளராக இருந்த அதன்பின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அதனை தொடர்ந்து நடிகர் வைபவ் நடித்த மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர்.
இவரைப் போலவே தற்போது செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமி திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார். இவர் ஏற்கனவே மா கா பா ஆனந்த் நடித்த படத்தில் ஜோடியாக நடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ஜெய் நடிக்கும் புதிய படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் ஜெய்யுடன் இணைந்து பாரதிராஜாவும் நடிக்க உள்ளார். இயக்குனர் சுசீந்திரன் இயக்க உள்ளார். இவரும் திரை உலகில் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.