Thursday, April 18, 2024
-- Advertisement--

காதல் கணவரின் 40வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த நஸ்ரியா…!!! வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள்.

நஸ்ரியா டிவி நிகழ்ச்சிகளை முதலில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் அவருக்கு மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நேரம் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நஸ்ரியா.

நடித்த முதல் படத்திலேயே இளசுகளை கவர்ந்தார் தன்னுடைய முகபாவனைகளால் ரசிகர்களை வசியம் செய்தார் அதன்பின் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் கீர்த்தனா என்ற கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து அசத்தி இருந்தார். அதன்பின் தனுசுடன் நடிக்கும் வாய்ப்பு நஸ்ரியாவிற்கு கிடைக்க நையாண்டி திரைபடத்தில் நஸ்ரியா நடித்திருந்தார். அந்த படத்தில் வரும் பாடல் காட்சியில் தன்னுடைய இடுப்பு என்று வேறொருவர் இடுப்பை காட்டிவிட்டார்கள் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றச்சாட்டை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் நஸ்ரியா.

அதன்பின் தமிழ் சினிமாவிற்கு கும்பிடு போட்டுவிட்டு சில மலையாளப் படங்களில் நடித்து வந்த அவருக்கு 2014 ஆம் ஆண்டு நடிகர் பகத் பாசிலுடன் திருமணம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த பஹத் நஸ்ரியா இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு நஸ்ரியா TRANCE என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து தெலுங்கில் நானியுடன் தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருந்தார்.

நஸ்ரியா ஒருபக்கம் படங்களில் நடித்து வர அவருடைய கணவர் பகத் பாசில் அவர்களும் தமிழ் படங்களில் நடிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். சமீபத்தில் பகத் பாசில் நடித்து வெளியான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதால் செம குஷியாக இருக்கிறார் பகத். தனது மனைவி நஸ்ரியாவிற்கு நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம் கதை தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார் நஸ்ரியா.

இந்நிலையில் தனது அன்பு கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார் நஸ்ரியா.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles