Saturday, April 20, 2024
-- Advertisement--

காதல் கணவருடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா…!!! நயன்தாராவின் ரொமான்டிக் புகைப்படங்கள் ட்ரெண்டிங்..!!!

நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை. நயன்தாரா நடித்த படங்களுக்கு நல்ல பிசினஸ் இருப்பதால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நயன்தாராவை வைத்து படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அறம், கோலமாவு கோகிலா, மாயா போன்ற படங்கள் பெரிய அளவில் நயன்தாராவிற்கு வெற்றியை கொடுத்தது. சமீபத்தில் வெளியான O 2 திரைப்படம் கூட OTT தளத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஜூன் ஒன்பதாம் தேதி நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனை மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களில் தனது பெற்றோர்களை பார்ப்பதற்காக கொச்சினுக்கு விக்னேஷ் அவனை அழைத்து சென்றிருந்தார்.

நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர் ஆனால் நயன்தாராக்கு தனது திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை பெரிய தொகைக்கு விற்று விட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 25 கோடிக்கு விற்று விட்டார் என்று செய்திகள் எல்லாம் வெளிவந்தது.

தற்பொழுது NETFLIX 25 கோடி என்பது ரொம்ப அதிகம் உள்ளது என்று பின்வாங்கியுள்ளது அதனால் டென்ஷனான நயன்தாரா தரப்பு திருமண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட ஆரம்பித்தார்கள் திருமணம் முடிந்ததும் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் நெட்லிக்ஸ் திருமண நிகழ்ச்சியை வெளியிடாததால் நொந்து போன நயன்தாரா தரப்பு NETFLIX தளத்தில் என்ன பிரச்சனை என்று கேட்க திருமண புகைப்படங்களை நாங்கள் வெளியிடுவதற்கு முன்பு நீங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டது தான் பிரச்சினை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது ஒரு புறம் இருக்க ஹனிமூன் கொண்டாட தாய்லாந்து சென்று வந்த புதுமண ஜோடிகள். ஹனிமூன் சென்ற சில நாட்களிலே அவசர அவசரமாக திரும்பினார்கள். நயன்தாரா சாருக்கானின் ஜாவான் பட சூட்டிங் கலந்து கொண்டு வந்தார்.

ஓய்வு நேரத்தில் தனது காதல் கணவருடன் புகைப்படத்தை எடுத்து வெளியிடும் நயன்தாரா தாலி தெரியும்படி தனது காதல் கணவருடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த சிங்கிள்ஸ் இப்படி புகைப்படத்தை வெளியிட்டு எங்களை உசுப்பேத்தாதீர்கள் என்று கிண்டலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles