கொரானோ என்னும் கிருமி தொற்று தற்போது உலகெங்கும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது.
நாளுக்கு நாள் பல பிரபலங்களும் பல மக்களும் இந்த நோய் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான நயன்தாராவிற்கும் மற்றும் அவரது காதலரான விக்னேஷ் சிவனுக்கும் கொரானோ தொற்று இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. மேலும் அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இதுகுறித்து செய்திகளை பார்த்த விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புள்ள கொரானோ நாங்கள் இன்னும் நலமுடன் இருக்கிறோம். எங்களுக்கு வலிமையும் உன்னை எதிர்கொள்ளும் திறனும் இருக்கிறது. இதுபோன்ற செய்திகள் வெளியிட்டவர்களுக்கு இந்த வீடியோவை சமர்ப்பிக்கிறோம் என்பதுபோல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தையாக மாறி பாட்டு பாடும் ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் நயன்தாரா அழகாக உள்ளார் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.