நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் மற்றும் நடிகர் நடிகைகள் அனைவரும் தங்களது பிள்ளைகளுடனும் பெற்றோர்களுடனும் புகைப்படம் எடுத்து அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் பிரபல நடிகை நயன்தாரா தனது இரண்டு மகன்கள் உடன் அன்னையர் தினத்தை கொண்டாடி உள்ளார். தனது மகன்களுடன் நயன்தாரா கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை அவரது கணவர் விக்னேஷ் சிவன் வெளியிட்டு அம்மாவான பிறகு உன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி, உனது வேறு எந்த எக்ஸ்பிரஷன்களை விடவும் சிறப்பானது.
உன்னை அம்மாவாக உயிர், உலக் இருவரும் பெற்றதற்கு அவர்கள் பாக்கியம் செய்திருக்கிறார்கள். I LOVE YOU THANGAM
இந்த சிரிப்பு சந்தோசம் எப்போதும் உன் முகத்தில் இருக்க வேண்டும் என நயன்தாரா கணவர் மற்றும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கிறார்.



