தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. இந்த முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை தன் வசீகர முகத்தால் இவர் கைப்பற்றினார். இந்த படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க நிறைய வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகைகளில் ஒருவராக வலம்வந்தார் நயன்தாரா.
நடிகர் சிம்புவுடன் நடித்த படத்தில் சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக இருக்கும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அந்த காதல் முறிவுக்கு பிறகு நயன்தாரா பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் இணைந்து வேலை பார்த்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையிலும் அவர் பிரபுதேவாவை காதலித்து வந்தார். இதற்காக பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார்.
நயன்தாராவும் பிரபுதேவாவும் நிச்சயம் முடிந்து திருமணம் வரை சென்றனர். நயன்தாராவும் நடிப்பை விட்டு விலகி இனிமேல் திருமண வாழ்வில் ஈடுபடுவதாகவும் பேட்டியில் கூறினார். ஆனால் அவரது காதல் திருமணம் வரை சென்று நின்று நின்று விட்டது. இதற்கு காரணம் தற்போது வெளிவந்துள்ளது. பிரபுதேவா திருமணத்திற்கு முன்பு சிம்புவுடனான பழக்கத்தை பற்றி கேட்டு மிகவும் அவரை நோகடித்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது பிரிந்த நயன்தாரா இப்போது வரை பிரபுதேவாவுடன் பேசவில்லை என்றும் கூறிவருகின்றனர்.